My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

மக்காச்சோள மேக்சிம்!

மக்காச்சோள மேக்சிம்!

உலகளவில், அதிகமாகப் பயிரிடப்படும் தானியப் பயிர்களில் ஒன்றாக மக்காச்சோளம் விளங்குகிறது. இது, தானியப் பயிர்களின் அரசி எனப்படுகிறது. மக்காச்சோளம், உணவுப் பொருளாக மட்டுமின்றி, கால்நடைத் தீவனப் பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் முக்கிய உணவுப் பொருளாக விளங்கும் மக்காச்சோளம்,…
More...
ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் காய்கறி உற்பத்தி!

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் காய்கறி உற்பத்தி!

ஒருங்கிணைந்த பண்ணைய அணுகுமுறை என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முழுமையான செயல் திட்டமாகும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் போதிய வருமானம் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அதன் மூலம் வாழ்வாதாரம் மேம்படுவதை நோக்கமாகக் கொண்டது.…
More...
நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி உத்திகள்!

நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி உத்திகள்!

இந்தியாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளில் இரண்டாம் இடத்தில் இருப்பது கரும்புத் தொழிற்சாலை. எனவே, கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். கரும்பு உற்பத்திக் குறைவால் உற்பத்திச் செலவு அதிகரித்து, நிகர இலாபம் வெகுவாகக் குறைந்து விடுகிறது. எனவே, செலவைக்…
More...
அங்கக முறையில் கரும்பு சாகுபடி!

அங்கக முறையில் கரும்பு சாகுபடி!

தமிழகத்தில் மூன்று இலட்சம் எக்டரில் நடைபெறும் சாகுபடி மூலம், 35.2 மில்லியன் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரி மகசூல் எக்டருக்கு 110 டன்னாகும். நவீன சாகுபடி முறைக்கும், அங்கக சாகுபடி முறைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இவை, உர நிர்வாகம்,…
More...
இயற்கை வேளாண்மை முறையில் சூரியகாந்தி சாகுபடி!

இயற்கை வேளாண்மை முறையில் சூரியகாந்தி சாகுபடி!

எண்ணெய் வித்துப் பயிர்களில் குறிப்பிடத்தக்கது சூரியகாந்தி. இது, பெரும்பகுதி மக்களின் சமையல் எண்ணெய்த் தேவையைச் சரி செய்கிறது. இதன் சாகுபடி உத்திகள் குறித்து இங்கே பார்க்கலாம். மண்வகை சூரியகாந்தியை, நல்ல வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். ஆயினும்,…
More...
இயற்கை வேளாண்மை முறையில் நிலக்கடலை சாகுபடி!

இயற்கை வேளாண்மை முறையில் நிலக்கடலை சாகுபடி!

நிலக்கடலை, நம் நாட்டின் முக்கிய எண்ணெய்ப் பயிர்களுள் ஒன்றாகும். நிலக்கடலை சாகுபடிக்கு, செம்மண் அல்லது மணல் கலந்த கருமண் மிகவும் உகந்ததாகும். உழவு முறை மண் புழுதியாகும் வரை நிலத்தை, 3-4 முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன்,…
More...
பனிவரகு சாகுபடி!

பனிவரகு சாகுபடி!

பனிவரகு தொன்று தொட்டுப் பயிரிடப்படும் குறுந்தானியப் பயிர்களில் ஒன்றாகும். இது, மலைவாழ் மக்களால், மண்வளம் குறைந்த பகுதிகளில் மானாவாரியில் பயிர் செய்யப்படுகிறது. ஏலகிரி, ஏற்காடு, கல்வராயன், சேர்வராயன் மற்றும் கொல்லிமலைப் பகுதியில் தொன்று தொட்டு விளையும் பயிர் பனிவரகு. புதிது புதிதாகச்…
More...
பருத்தி பிளஸ்!

பருத்தி பிளஸ்!

பருத்தி, முக்கிய வணிகப் பயிர்களில் ஒன்றாக விளங்குகிறது. இதில், பூக்கள், சப்பைகள் மற்றும் காய்கள் உதிர்தல், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றைச் சரி செய்ய, கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும். உர மேலாண்மை பருத்தி…
More...
சிட்ரொனெல்லா புல் சாகுபடி!

சிட்ரொனெல்லா புல் சாகுபடி!

சிட்ரொனெல்லாவின் அறிவியல் பெயர் Cymbopogon nardus இது, Poaceae குடும்பத்தை, Plantae என்னும் பெருங் குடும்பத்தைச் சார்ந்தது. இது, ஒருவகை வாசனைப் புல்லாகும். இதன் இலைகளில் இருந்து கிடைக்கும் வாசனை எண்ணெய், சோப்பு மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில், ஜெரேனியால், சிட்ரொனெல்லால்…
More...
இயற்கை வேளாண்மை முறையில் எள் சாகுபடி!

இயற்கை வேளாண்மை முறையில் எள் சாகுபடி!

எண்ணெய் வித்துப் பயிரான எள்ளைப் பயிரிடுவதற்கு, நல்ல வடிகால் வசதியுள்ள, செம்மண் அல்லது கருமண் மிகவும் ஏற்றதாகும். ஜூன் ஜூலை, அக்டோபர் நவம்பர், பிப்ரவரி மார்ச் ஆகிய காலங்கள், எள் சாகுபடிக்கு ஏற்றவை. உழவு நிலத்தை, 3-4 முறை இரும்புக் கலப்பை…
More...
கண்டங்கத்தரி சாகுபடி!

கண்டங்கத்தரி சாகுபடி!

இந்தியாவில் மருந்து தொழிற்சாலைகளுக்கு ஸ்டெராய்ட்ஸ் மூலப்பொருள்களை வழங்கும் துணை ஆதாரமாகக் கண்டங்கத்தரி விளங்குகிறது. கண்டங்கத்தரிப் பழங்களில் இருந்து பெறப்படும் சோலாசோடின் என்னும் வேதிப்பொருள், டியோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருளுக்கு மாற்றாக, ஸ்டெராய்ட் ஹார்மோனைத் தொகுப்பதற்குப் பயன்படுகிறது. இலை, கருத்தடை மாத்திரை உற்பத்தியில் பயன்படுகிறது.…
More...
திருந்திய நெல் சாகுபடி உத்திகள்!

திருந்திய நெல் சாகுபடி உத்திகள்!

குறைவான விதை, குறைவான நீர், குறைவான வேலையாட்கள் மூலம், அதிகளவில் மகசூலைத் தருவது, திருந்திய நெல் சாகுபடி முறை. இப்போது பரவலாக இம்முறையில் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதைப்பற்றி இங்கே பார்க்கலாம். திருந்திய நெல் சாகுபடியின் கோட்பாடுகள் +…
More...
தென்னையின் தண்டு மற்றும் வேரைத் தாக்கும் நோய்கள்!

தென்னையின் தண்டு மற்றும் வேரைத் தாக்கும் நோய்கள்!

இந்திய தென்னை சாகுபடியில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் முதன்மை வகிக்கின்றன. இந்தியாவின் மொத்த உற்பத்தி மற்றும் பரப்பில் 89 சதமளவில் இந்த மாநிலங்கள் பங்கு வகிக்கின்றன. எனினும் உற்பத்தித் திறனில், தென்னிந்திய அளவில் ஆந்திராவுக்கு அடுத்த…
More...
சம்பா நெல் சாகுபடி உத்திகள்!

சம்பா நெல் சாகுபடி உத்திகள்!

தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 33 சதத்தில் நெல் பயிரிடப்படுகிறது. நெல் பயிரானது ஆண்டின் மூன்று பருவங்களிலும் பயிரிடப்பட்டாலும், இரண்டாம் பருவமான சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் தான் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, சம்பா பருவத்துக்கு…
More...
நெல் சாகுபடியில் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடு!

நெல் சாகுபடியில் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடு!

தமிழகத்தில் நெல் சாகுபடியில் இரசாயன உரங்கள் அதிகளவில் இடப்படுகின்றன. இதனால், மண்வளம் குறைவதோடு, சுற்றுச்சூழல் கேடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையைத் தவிர்க்க, இரசாயன உரங்களைக் குறைத்து இயற்கையோடு ஒன்றிய அங்கக வேளாண்மையின் முக்கியப் பகுதியான நுண்ணுயிர் உரங்களை, நெற்பயிரின் பல்வேறு வளர்ச்சிப்…
More...
நிலக்கடலை ரிச்!

நிலக்கடலை ரிச்!

மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் பயிராக நிலக்கடலை உள்ளது. இது, எண்ணெய் வித்துப் பயிர்களின் அரசன் என அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, கடலை, வேர்க்கடலை, மல்லாட்டை, கச்சான், கல்லக்கா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. நிலக்கடலை, உணவுப் பொருளாக மட்டுமின்றி, எண்ணெய்த் தயாரிப்பிலும், மதிப்புக்…
More...
சாமை சாகுபடி முறை!

சாமை சாகுபடி முறை!

மானாவாரியில் பயிரிட ஏற்ற மகத்தான பயிர் சாமை. குறுகிய காலத்தில், குறைவான இடுபொருள் செலவில் வருமானம் தரும் பயிர். இதில், அதிக மகசூலைத் தரும் இரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றைப் பயிர் செய்தால் கூடுதல் மகசூலைப் பெறலாம். உயர் விளைச்சல் இரகங்கள்…
More...
வரகு சாகுபடி முறை!

வரகு சாகுபடி முறை!

வரகு, இந்தியாவில் சுமார் 3000 ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டு வருகிறது. குறுந்தானியப் பயிர்களில் இது நீண்ட வயதுள்ள, அதாவது 125-130 நாட்கள் பயிராகும். இப்பயிர் கடும் வறட்சியைத் தாங்கி, அனைத்து நிலங்களிலும் வளரும். வரகை நீண்ட காலத்துக்குச் சேமித்து வைக்கலாம். இது, இரத்தச்…
More...
கரும்புக்கு இரும்பு மற்றும் துத்தநாகத்தின் அவசியம்!

கரும்புக்கு இரும்பு மற்றும் துத்தநாகத்தின் அவசியம்!

பொதுவாக, மண்ணில் நுண் சத்துகள் போதியளவில் உள்ளன. ஆயினும், பயிர்களுக்குத் தொடர்ந்து தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை மட்டுமே உரமாக இடுவதால், நிலத்தில், நுண் சத்துகளின் அளவு மிகவும் குறைந்து விடுகிறது. இதனால், நுண்சத்துப் பற்றாக்குறை அடையாளங்கள் தோன்றும். கரும்புப்…
More...